tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்

புதுச்சேரி,ஜூலை 23- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில்  ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. செவ் வாய்க்கிழமையன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், புதுச்சேரி ஹைட்ரோகார்பன் திட் டத்துக்கு எதிரான தீர்மானத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள் ளும் தீர்மானம் அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.