தஞ்சாவூர், ஜூன் 12- தமிழகத்தில் பொதுமக்கள், விவ சாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரு வதைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், விவசாய நிலங்க ளில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சி போன்ற நாசகரத் திட்டங் களை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழ் நாட்டிற்கு உரிய தண்ணீரை கேட்டு பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜூன் 5 முதல் இருசக்கர வாகனப் பிரச்சாரம் தொடங்கி நடை பெற்று வருகிறது.
திருவையாறு
திருவையாறு ஒன்றியம் வரகூர், அம்மையகரம், செந்தலை, வளப்பக் குடி, மணத்திடல், கருப்பூர், நடுக் காவேரி, திருப்பந்துருத்தி, கண்டியூர், வீரசிங்கம்பேட்டை, திருச்சோற்றுத் துறை, திருவையாறு உள்ளிட்ட பல் வேறு இடங்களில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ராம், எம்.பழனி அய்யா, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கே.மதியழகன், பிரதீப் ராஜ் குமார், பி.ஏ. பழனிச்சாமி, கிளைச் செய லாளர்கள் வரதராஜன், கலியமூர்த்தி, கே.சின்னையன், ஏ.அந்தோணிசாமி, கே.விஜயகுமார், டி.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம்
ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு பேசி னார். மாவட்டக்குழு உறுப்பினர் வீ. கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குத்புதீன், பெரி யண்ணன், பாரூக் முகமது உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திருவோணம்
திருவோணம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் பி.கோவிந்தராசு தலை மையில், ஊரணிபுரம், நெய்வேலி, அனந்தகோபாலபுரம், தோப்பநாய கம், இடையாத்தி, வெட்டுவாக் கோட்டை, சிவவிடுதி, காடுவெட்டி விடுதி, கோட்டைக்காடு உள்ளிட்ட 18 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராம சாமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் ரவிச்சந்திரன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச்செயலாளர் சின் னப்பா, ஒன்றியத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.