tamilnadu

img

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் மீதும் பிஎஸ்ஏ பாய்ந்தது...

ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீர் முன்னாள்ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்மீது பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் (Public Safety Act) கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது.ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்துதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுஇருந்த ஐஏஎஸ் அதிகாரி பைசல் மீது,வெள்ளிக்கிழமையன்று இரவு இந்த புதியநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆகஸ்ட் 13 அன்று நள்ளிரவு, இஸ்தான்புல் செல்லவிருந்த பைசலை,தில்லி விமான நிலையத்தில் தடுத்துநிறுத்திய போலீசார், அவரைக்கைது செய்து ஸ்ரீநகருக்கு கொண்டு சென்றனர். அப்போதுமுதலே அவரை தடுப்புக் காவலில் வீட்டுச்சிறை வைத்திருந்தபோலீசார், தற்போது பிஎஸ்ஏசட்டத்திலும் கைது செய்துள்ளனர். இச்சட்டத்தின்படி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், 2 ஆண்டுகள் வரையில் காவலில் வைத்திருக்க முடியும்.கடந்த பிப்ரவரி 6 -ஆம் தேதி, காஷ்மீர்முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.