ஹைதராபாத்:
நவராத்திரி விழாவின் ஒருபகுதியாக, நடைபெறும் ‘தாண்டியா’ மற்றும் ‘கர்பா’நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோரை, ‘ஆதார்’ அட்டையை வைத்து பரிசோதிக்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் ஒன்றான பஜ்ரங் தளம் கூறியுள்ளது.நவராத்திரி விழாக்களை ஒருங்கிணைக்கும் குழுக்களுக்கு, பஜ்ரங்தள் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ். கைலாஷ், இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது:
“இந்து மதத்தைச் சாராதஇளைஞர்கள் பலர், ‘தாண் டியா’ மற்றும் ‘கர்பா’ நிகழ்ச்சிகளுக்கு வருவதை நாங்கள்கடந்த சில ஆண்டுகளாக கவனித்து வருகிறோம். அவர்கள்நம்முடைய பெண்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அப்பாவிப் பெண்களிடம் ‘லவ் ஜிகாத்’திலும் ஈடுபடுகின்றனர்.எனவே, நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் நுழைவு வாயிலில் ஆதார் அட்டையை சோதனை செய்துஇந்து மதத்தைச் சாராதவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும். அதேபோல, இந்த நிகழ்ச்சியின்போது இந்துக்கள் அல்லாதவர்களை பாதுகாவலர்களாக (Bouncers) பணியில் நியமிப்பதையும் தவிர்க்க வேண்டும்.”இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.