ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நீடிக்கும் தடை உத்தரவுகள்காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவுகடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. முன்னதாக பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில், வெளிமாநிலத்தவர்களை உடனடியாக காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர். இதனால் மாநிலம் முழுவதும் கட்டுமானப்பணிகள் முடங்கி கிடக்கின்றன.புல்வாமாவில் உள்ள கன்மோ தொழிற்பேட்டையில் மொத்தமுள்ள 200 யூனிட்டுகளும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு கிடக்கின்றன. உள்ளூரைச் சேர்ந்தவர்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களும் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை. இதனால் தினமும் ரூ.3 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தொழிற்பேட்டைதலைவர் ஜூபைர் அகமது தெரிவித்துள்ளார். இதேபோல மாநிலத்தில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகளும் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப்பின் வேலை இழந்திருக்கின்றனர்.