tamilnadu

img

இடையறாது உச்சரிக்கப்படுவாய்.... கௌரி லங்கேஷ்

கௌரி லங்கேஷ்-நீ
கொலையுண்டே     நாடறியப்பட்டாய்
குடத்துள் விளக்கான நீ
வானில் நிலவானாய் 

கொல்லப்படுவோம் என அறிந்தும் 
நில்லாமல் தொடர்ந்தது உம்பயணம் 
யாருக்கு நேரும் இத்தருணம்

ஊடக நெறியில்
உச்சமாய் அச்சமின்மை 
ஆட்கொண்டது அழகு 

ஊருக்கு  உபதேசியாய் இல்லை-நீ
நேருக்கு நேர்நின்ற முல்லை 

தீவிரவாதம் 
தழுவிய இளைஞர்களை
நழுவிட நெறிப்படுத்தி
இதழியலை அழகியலாக்கினாய்-உன்
இதழ்கள் மனிதமே பேசவைத்தாய்
குஜராத் கோப்புகளின் 
நிஜங்களைப் பெயர்த்தன
கவின் கன்னடத்தில்-உன்
நவீன மொழி நடை

உண்மை சுடும் - அதனால்
காவிகளின் துப்பாக்கி 
கல்புர்கி வழியில் 
கௌரி உன்னையும் சுட்டது

மாண்டு ஆண்டுகள் மூன்று 
கடந்த பின்பும்
ஆள்பவர்களின் அராஜகம்
ஆண்டாண்டு காலமாய்
உன்னை நினைக்க வைத்துக்     கொண்டே இருக்கும்

மனிதம் 
கடைசி மனிதனுக்குள்ளவரை
இடையறாது உச்சரிக்கப்படுவாய்
கௌரி லங்கேஷ் கௌரவமாய்