tamilnadu

சத்தியமங்கலத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி

சத்தியமங்கலம்,ஜூன் 30- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முன் பருவ மழைக் காலத்துக்கான வன  விலங்குகள் கணக்கெடுப்புப் பணி துவங்கி யுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச் சரகத்தில் ஜூலை 4 ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்கள் முன்  பருவ மழைக் காலத்துக்கான வன விலங்கு கள் கண்காணிக்கும் பணிகள் நடைபெறு கின்றன. இதில் 3 நாள்கள் பகுதி வாரி கணக் கெடுப்பும், 3 நாள்கள் நேர்கோட்டுப் பாதை  கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெறும். பவானிசாகர் காவல் பகுதிகளில் கணக் கெடுப்புப் பணி காராட்சிகொரையில் துவங்கியது. இதில் வனவர் மற்றும் வனக்காப்பா ளர்கள், வனக் காவலர்கள் மற்றும் 3 வேட்டைத் தடுப்பு காவலர்களும், தன்னார்வ லர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் வன வியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  யானைகள், புலிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் எச்சம், கீறல், கால்தடங் கள், வன விலங்குகளை நேரடியாகப் பார்த்தல் போன்றவை கணக்கிடப்படும். இதற்கென அதிநவீன கேமிராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி  உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். இதில் யானைகளின் கால்தடம், புலிகளின்  எச்சம், சிறுத்தை நடமாட்டம் மற்றும் கழுதைப் புலிகளின் கால்தடம் ஆகியவை பதிவு செய்யப்படும்.