நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் கோடியக்கரையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம். இங்கே புள்ளிமான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.கடந்த 2018, நவம்பர்-15ல் தாக்கிய ‘கஜா’ புயலில் நூற்றுக்கணக்கான விலங்குகள் உயிரிழந்தன. நூற்றுக்கு மேற்பட்டமான்கள் கடற்கரையில் செத்துக் கிடந்த காட்சி மிகப்பெரிய அவலமாகும். பின்னர் இந்த வன விலங்குகளைப் பாதுகாத்திடவும் புதிய விலங்குகளைக் கொண்டு வந்து இந்தச் சரணாலயத்தில் விட வனத்துறை முயற்சிகள் மேற்கொண்டன. வனவிலங்குகளின் இனப்பெருக்கம் காரணமாகவும் தற்போது, கோடியக்கரை சரணாலாயத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள கணக்கெடுக்கும் பணி, சனிக்கிழமை துவக்கப்பட்டது.
கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மேற்பார்வையில், மயிலாடுதுறை மற்றும் வேலூர் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வனத்துறையினர் என 50 பேர், 14 குழுக்களாகப்பிரிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். விலங்குகளின் தடயங்கள் மற்றும் நவீன கேமராக்கள் மூலமாக கணக்கெடுப்புப்
பணி நடைபெறுகிறது.