பொள்ளாச்சி,டிச.16- பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி ஞாயி றன்று தொடங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மேற் குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்ப கம் அமைந்துள்ளது . இங்கு புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இப்பு லிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை கால விலங்குள் கணக்கெடுப்பு மற்றும் டிசம்பர் மாதம் குளிர்கால புலிகள் கண்கெடுப்பு நடத்தபட்டு வரு கிறது. இந்நிலையில் குளிர்க்கால புலிகள் கணக்கெ டுப்பு ஞாயிறன்று தொடங்கபட்டது. இதுகுறித்து வனத்துறைனர் கூறியதாவது, ஆறு நாட்கள் நடைபெறும் இக்கணக்கெடுப்பு பணியானது ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட் பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம் பள்ளி உள்ளிட்ட 6 வனசரகங்களில் நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்பில், 3 நாட்கள் தாவர உண்ணிகள் மற்றும் 3 நாட்கள் மாமிச உண்ணிகள் என, விலங்கு களின் கால் தடம், கழிவு எச்சம் மற்றும் நேரடி பார்வை போன்ற வகையில் கணக்கெடுக்கபடுகிறது. இறுதியாக கணக்கெடுப்பு குறித்த ஆவணங்களை தலைமை வன பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு வனத்துறையினர் தெவித்தனர்.