சென்னை,டிச.30- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள் ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தப்படுகிறது. முதலில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரியில் நடத்தப் படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள் ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறு முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும், மக்களவை, சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டாலும், வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதும் மனு வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வான, நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சித் தேர்தலை 3 மாத காலத் திற்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது என்றும், இரண்டு கட்டமாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்ட ரீதி யாக எந்த தடையும் இல்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட ரீதியாக தடையில்லை என்றும் நீதிபதி கள் தெரிவித்தனர்.