ஆவடி கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
சென்னை, ஜன. 29- மோடி ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் தேசத்தின் பாதுகாப்புக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் ஆபத்துதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். இந்திய மதச்சார்பின்மைக்கு எதி ராக பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதநல்லிணக்க ஒற்று மை கூட்டமைப்பு சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் ஆவடியில் செவ்வா யன்று (ஜன. 28) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமை யை பாதுகாக்கவும் நடக்கும் இயக்கங் களில் பெண்களின் பங்களிப்பு அதிகள வில் உள்ளது பாராட்டத்தக்கது.
இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா வில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மக் கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய யூனியன் கூட்டத்திலேயே இதை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்போகிறார்கள்” என்று குறிப்பிட்டார். கூட்டத்திற்கு இணை ஒருங்கிணைப் பாளர் ஏ.ஹம்சாபாய் தலைமை தாங்கி னார். ஒருங்கிணைப்பாளர் மா.பூபாலன் வரவேற்றார். இதில் கே.நவாஸ்கனி எம்.பி., (இந்திய முஸ்லிம் லீக்), எம். சதீதுத்தீன் (அடையாறு பள்ளி வாசல் இமாம்), சா.மு.நாசர் (திமுக), எம்.ராம கிருஷ்ணன், ஆர்.ராஜன் (சிபிஎம்), மு. வீரபாண்டியன் (சிபிஐ), வன்னி அரசு (விசிக), எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் (மஜக), அ.ச.உமர் பாரூக் (எஸ்.டி.பி.ஐ), ஜெ.அமீன் (தமுமுக), தமிழ் சாக்ரடீஸ் (திரவிடர் கழகம்), எச்.அலிம் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ரட்சண்ய தாஸ் (ஐக்கிய கிறித்துவ கூட்டமைப்பு), எஸ்.சர்புதீன் (ஆவடி அனைத்து பள்ளி கூட்டமைப்பு) ஆகியோரும் பேசினர். முன்னதாக ஆவடி பேருந்து நிலையம் அருகில் இருந்து பேரணியாக வந்த னர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.