அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து, முத்தலாக் சட்டம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு போன்றவற்றிற்கு பொதுச்சமூகத்தில் பெரிய அளவிற்கு எதிர்ப்பு எழவில்லை. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு கொந்தளிக்கிறது. மத ரீதியாக பிளவுபடுத்துவதை மக்கள் ஏற்கவில்லை. பெரும்பான்மை மதவாதத்தால் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை இளைஞர்களும், மாணவ சமுதாயமும் ஏற்கவில்லை.