tamilnadu

img

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல், டிச.7- தமிழகத்தில் அகதிகளாக குடி யேறியிருக்கும் இலங்கை தமி ழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு முன்வர வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள் ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்றார்.  சனியன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு குடிமக்கள் குடியுரிமை சட் டத்தை நிறைவேற்றும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களால் இந்தியாவில் குடி யேறிய சிறுபான்மை மக்களுக்கு எதி ராக குடியுரிமை சட்டம் கொண்டு வரு வதை எல்லா எதிர்க்கட்சிகளும் கடு மையாக எதிர்க்கின்றன. இது மக் களை மத ரீதியாக கூறு போடுவதற் கும் பிளவுபடுத்துவதற்கும் தான் கொண்டுவரப்படுகிறது. இது மிக கடுமையான பிரச்சனைகளை உரு வாக்கும். அந்த நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியிருக்கிற இஸ்லாமியர்களை வெளியேற்று வதற்கான சதி அதற்குள்ளே இருக்கி றது என்பது ஒரு மோசமான நட வடிக்கையாகும். 

அது மட்டுமல்ல இலங்கையில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வந்து தமி ழகத்தில் குடியேறி இருக்கிற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பல முறை அவர் கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த மசோதா வில் இலங்கை அகதிகளுக்கு குடி யுரிமை வழங்குவது தொடர்பாக எது வும் இல்லை. எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்டை நாடான இலங்கையிலிருந்து இந்தியாவில் குடியேறியிருக்கிற இலங்கை தமி ழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக அந்த மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். 

வருடம் முழுவதும் தேர்தல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் நட வடிக்கை அலங்கோலமாக உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளைத் தவிர மீதியுள்ள மாவட்டங் களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் என்ன சிக்கல் வருகிறது என்றால் இந்த 9 மாவட்டங்களில் வார்டு வரை யறை, இடஒதுக்கீடு முறையாக செய்யவில்லை. அதே போல் இதர மாவட்டங்களில் எப்படி செய்திருப் பார்கள் என்ற கேள்வி அதற்குள் இருக்கிறது. ஆகவே தமிழக அரசு எப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தப் போகிறது என்று தெரிய வில்லை. இப்போது 9 மாவட்டத்திற்கு ஒரு தேர்தல். பிறகு 21 மாவட்டத்திற்கு ஒரு தேர்தல். பிறகு நகராட்சி, மாநக ராட்சி, பேரூராட்சிக்கு ஒரு தேர்தல். வருடம் முழுவதும் தேர்தல் நடத்திக் கொண்டு இருப்பார்கள். உள்ளாட்சி அமைப்பில் ஒரே நாளில் தேர்தல் நடத்திய நிலை மாறி இப்போது ஒவ் வொரு நாளும் தேர்தல் நடத்த வேண் டிய அவல நிலை உருவாகி உள்ளது. வார்டு வரையறை செய்யாமல் தேர் தல் அறிவித்தது தவறு தான். எனவே 9 மாவட்டங்களில் இப்போது தேர்தல் நடத்தாதீர்கள் என்று உச்சநீதி மன்றமே அறிவித்துள்ளது. 

அதிமுகவிற்கு தோல்வி பயம் 

நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்து நீங்கள் ஏன் நழுவுகிறீர்கள். இந்த 3 ஆண்டுகளாக ஏன் நடத்த வில்லை? அதிமுக மீது தப்பில்லா தது போல் காட்டிக்கொள்ள முயல் கிறார்கள். நாடாளுமன்ற தேர்த லில் நடந்தது போன்று தோல்வி யடைந்தால் அது சட்டமன்ற தேர் தலை பாதிக்கும். தோல்வி பயம் கார ணமாகத்தான் தேர்தலை தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறார்கள். ஒட்டுமொத்த மக்கள் தொகை அடிப்படையில் சுழற்சி அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். எனவே எஸ்.சி. மக்க ளுக்கு மாநகராட்சி உள்பட அனைத்து தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக் கீடு உண்டு. இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதை தவிர்க்கக் கூடாது. 

எதிர்க்கட்சிகள் வாதம் நியாயம் 

திமுக மனுப்போட்டு அதை உச்ச நீதிமன்றம் விவாதித்து உள்ளாட்சி தேர்தலில் வார்டு வரையறை செய்யா மல் தேர்தல் அறிவித்தது தவறு தான். எனவே 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தாதீர்கள் என்று உச்சநீதி மன்றமே ஏற்றுக்கொண்டு உள்ளது. அதே போல அதிமுக அரசே நாங்கள் 9 மாவட்டங்களில் தேர்தலை நிறுத்தி வைத்துவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண் டார்கள்.  இந்த வழக்கில் திமுக மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தர விட்டதை மறுக்காமல் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டதன் மூலம் எதிர்க் கட்சிகளின் வாதத்தில் நியாயமிருக்கி றது என்பது தான் உண்மை. 

கடலில் பெருங்காயம் கரைத்தது போல 

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக எங்களது மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய ஒரு கேள்விக்கு துறை அமைச்சர் விரிவாக பதில் அளித்துள் ளார். அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால் நாட்டில் வழங்கியிருக்கிற கல்விக்கடன்களில் 70 சதவீதம் உயர்சாதிப்பிரிவினர்களுக்கு வழங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 19.9 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 6.7 சத வீதம், பழங்குடி மக்களுக்கு 2.8 சத வீதம் தான் கடன் வழங்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார். உண்மை யிலேயே தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் தான் அடித்தட்டு மக்களாவர். அவர் களுக்குத் தான் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிற நேரத்தில் அந்த சமூகத்தினருக்கு கட லில் பெருங்காயம் கரைத்தது போல கல்விக்கடன் வழங்கியுள்ளார்கள். இங்கே எப்படிப்பட்ட சமூக அநீதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் போது வேதனையாக உள் ளது. இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். 

அலட்சியப்படுத்தப்படும்  சாதிமறுப்பு திருமண தம்பதிகள் 

சாதி மறுப்பு திருமணம் புரிந்த தம்பதிகளுக்கு அம்பேத்கர் பெயரால் ஊக்கத்தொகையாக 500 குடும்பங்க ளுக்கு ரூ.2 லட்சம் வழங்குவது தொடர்பாக ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட் டத்தில் 2015-16 ஆண்டில் 51 தம்பதி களுக்குத்தான் அரசு நிதி வழங்கி யுள்ளது. இதே போல் 2016-17ம் ஆண்டு 67 தம்பதிகளுக்கும், 2017-18ம் ஆண்டு 136 தம்பதிகளுக்கும், 2018-19ம் ஆண்டு 120 தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 500 தம்பதிகளுக்கு கொடுக்க வேண் டும் என்று தான் மத்திய அரசு கொடுக் கிறது. அது பற்றி மத்திய அமைச்சர் பேசும் போது அது ஒரு இலக்கு தான் கட்டாயம் என்றில்லை என்று கூறு கிறார். 130 கோடி மக்கள் வாழுகிற நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாஜக அரசு எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறது என்பது இதிலிருந்து தெரியவருகிறது. 

பாஜக அரசு படுதோல்வி 

மத்திய பாஜக அரசின் எந்த நட வடிக்கையாவது திருப்தியாக இருக்கிறதா? நாடு முழுவதும் இந்தியா வின் பொருளாதாரம் அதல பாதாளத் தில் போய்விட்டது என்பதை மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு எல்லோ ரும் ஒத்துக்கொள்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க நாடு திக்குமுக்காடுகிறது. இதற்கு நாட்டு மக்களிடம் பதில் சொல்ல முடியாமல் தான் தேசிய குடி யுரிமை சட்ட திருத்தம், காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவு நீக்கம் என்று மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளார்கள். வெங்காயம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துள் ளது என்பது தான் உண்மை. ஜி.எஸ்.டி வரி வசூலில் தேக்கம் ஏற்பட்டதால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கீட்டை நாங்கள் கொடுக்க முடி யாது என்று சொல்கிறது பாஜக அரசு. நாட்டில் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி இல்லாததால் சந்தை சுருங்குகிறது. எனவே ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்ய முடிய வில்லை. இன்னும் பல பொருட்களின் மீது வரியை உயர்த்தப் போவதாக அறி வித்துள்ளார்கள். அதனால் இப் போது இருக்கிற நெருக்கடி இன்னும் கூடுதலாக வாய்ப்புள்ளது என்றார். இந்த பேட்டியின் போது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.