திருச்சிராப்பள்ளி, டிச.7- தமிழ்நாடு மற்றும் பிற மாநி லங்களில் உள்ள பட்டியலிடப் பட்ட மத்திய அரசு கல்வி நிறுவ னங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல் கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் மாணவ- மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழ் நாடு அரசால் அராசணை பிறப் பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத் தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.