அரசு மருத்துவர்கள், சிறை கண்காணிப்பாளரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரி விசாரணை
தூத்துக்குடி,ஜூலை 15- சாத்தான்குளத்தில் காவல்துறை யினர் கொடூரமாகத் தாக்கியதில் வணி கர்களான ஜெயராஜ்,இவரது மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி ஜூலை 15 புதனன்று அரசு மருத்துவர்கள், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் சம்பவம் தொட ர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணை யம் விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதினர். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை யை தொடங்கியுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் விசார ணை அதிகாரியாக நியமிக்க ப்பட்டுள்ள ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
அவர் செவ்வாயன்று மாலை சாத்தான்குளத்திற்குச் சென்று ஜெய ராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர் களது கடைக்கு அருகேயுள்ள கடைக் காரர்கள், சாத்தான்குளம் காவல்நிலை யத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலரும், வழக்கில் முக்கிய சாட்சி யுமான ரேவதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளான புதனன்று மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி குமார் தனது விசாரணையை தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் வைத்து மேற்கொண்டார். சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வா ளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோர் விசார ணைக்கு ஆஜராகினர்.
ஒவ்வொருவரிடமும் தனித்தனி யாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை வரை தொடர்ந்து நீடித்தது. இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாத்தான்குளம் வியா பாரிகள் இறந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை யின் முடிவு அறிக்கைகள் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரி சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப் படும். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை( வியாழன்) மதுரை சிறைச்சாலைக்குச் சென்று சாத்தான்குளம் வழக்கில் கைதாகியுள்ள காவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன் என்று தெரிவித்தார்.