தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெற உள்ளது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவி இடங்களுக்கும் 590 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 9624 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள் என மொத்தம் 4 நிலையிலான பதவி களுக்கான 91975 இடங்களை நிரப்பிட தேர்தல் நடை பெற உள்ளது. டிசம்பர் 27,30 தேதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 49,688 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிராம பஞ்சாயத்துகள் பல வற்றில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவி களை ஊர்மக்கள் கூடி ஏலம் விட தொடங்கியுள்ள காட்சியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப் பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுப் குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற் கும், துணைத்தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டசெய்தி ஊடகங்களில் வெளிவந்துள் ளது. நடுகுப்பம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஏற் கனவே ஊராட்சித் தலைவராக இருந்த சக்திவேல் என்பவர் போட்டியிட விரும்பி உள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு முருகன் என்பவர் ஆசைப் பட்டுள்ளார்.
இருவரும் ஊர் பிரமுகர்களிடம் பேசியுள்ளனர். இதை அடுத்து கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருப்பணியை முடிப்பதற்காகவும், ஊர் மக்கள் நன்மை கருதியும் இருவரையும் தேர்ந்தெடுக்க ஊர் மக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு தீர்மா னம் கொண்டுவருவதற்கு முன்பு ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு அதை ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போன தாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வரும் 15-ஆம் தேதிக் குள் ஊர் பஞ்சாயத்தில் செலுத்த வேண்டும் என்று இருவருக்கும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சொன்ன படி அவர்கள் பணம் கட்டாவிட்டால் மீண்டும் ஏலம் நடத்துவது அல்லது இருவரையும் எதிர்த்து ஊர் மக்கள் சார்பில் வேறு வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்ட அவர்களின் தீர்மானம் கூறுகிறது. இப்படி ஏலம் விட்டால் ஏலம் எடுப்பவர் பதவிக்கு வந்த தும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க மாட்டார்க ளா என்று கேட்டால், தேர்தல் நடந்தாலும் அவர்கள் வெற்றிப் பெற்று கொள்ளையடிக்கத்தான் போகிறா கள். எனவே ஊர் பொது காரியத்திற்கு பணம் கொடுத்துவிட்டு கொள்ளையடிக்கட்டுமே என்கின்ற னர். இப்படிச் செய்வது சட்ட விரோதம் இல்லையா என்று கேட்டால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கு வதும் சட்ட விரோதம் தானே; இதுவெல்லாம் நடக்கா மலா இருக்கு. எங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்யவில்லை; ஊர் நன்மை கருதிதான் ஏலம் விடுகிறோம் என்கின்றனர். தீர்மானத்தில் ஊர் நன்மை கருதி ஏகமனதாக தேர்ந்தெடுக்க தீர்மா னிக்கப்படுகிறது என்று மட்டும்தான் வாசகம் இருக்கும். ஏலம் விட்டதற்கான ஆதாரம் எதுவும் இருக்காது என்று சொல்கின்றனர்.
இதுபோல பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள ஆலம்பாடி ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத் தில் ஓரத்தநாடு பகுதியில் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. நீடாமங்கலத்தை யொட்டி எடைமேலையூர் ஊராட்சியில் ஏலம் விடப் பட்டதில் பிரச்சனை ஏற்பட்டு பிறகு போட்டி உருவாகி யுள்ளது. இப்படி தமிழகத்தில் நம்முடைய கவனத் திற்கு வராத பல்வேறு ஊராட்சிகள் இந்த பட்டிய லில் இருக்கலாம் என்பது தெரியவருகிறது. விருது நகர் மாவட்டத்தில் ஏலம் விடும் பிரச்சனை கொலை யில் முடிந்துள்ளது. சில ஊராட்சிகளில் இதுகுறித்து விசாரணை நடத்துவற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. கடந்த காலங்களில் கிராம வளர்ச்சி என்கிற பெயரில் அங் கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இந்த ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. அதுவும் 5 லட்சம், 10 லட்சம் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால் இப்போது ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஏலம் விடப்பட்டுள் ளது. இந்த பதவிகளை வியாபாரமாக பார்ப்பதும் முதலீடு போட்டு அதைவிட அதிகமாக எடுத்துவிடலாம் என்று கணக்குப்போடும் மோசமான போக்கு தொடர்கிறது.
நேரடியாக மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் திட்ட நிதியை அவர்கள்தான் கையாளமுடியும். ஒரு உள்ளாட்சிப் பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.1கோடி என்றால் ஐந்து வருடத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி சாலை, குடிநீர், மின்விளக்கு, சுகாதார வசதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தவர்கள்தான் இந்த நிதியை கையாள்வார் கள். அவர் என்ன செலவு செய்தார்? எதற்காக இந்த நிதியை பயன்படுத்தினார் என்று கேள்வி கேட்க மக்க ளுக்கு உரிமை இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாதிரி உள்ளாட்சிப் பதவிகளை ஏலம்விடுபவர்கள், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஏலம் எடுத்த வர்கள், ஏலம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்த முக்கியஸ்தர்கள் என இவர்கள் அனைவர் மீதும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஆளும் கட்சிக்கு ஏதுவான தேதியில்தான் வைத்துள்ளனர். அதேபோல மொத்தமாக தேர்தலை நடத்தாமல் தமிழகத்தில் முதன் முறையாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்த லில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறு பவர்கள் அடுத்துவரும் நகராட்சி, பெருராட்சி, மாநக ராட்சி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று நினைக்கிறது ஆளுங்கட்சி. இதுபோன்ற காரணங்க ளுக்காகத்தான் ஊரக தேர்தல் முடிவுகளை அனைத்து உள்ளாட்சி தேர்தலும் நடத்தி முடித்தபிறகு வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. இதுபோன்ற தவறான முறைகளை சகித்துக்கொள்ள முடியாமல்தான் பலர் நீதிமன்றங்களை நாடுகின்றனர்.
இப்போது ஜனநாயக தேர்தல்முறையை கேலி கூத்தாக்கும் முறையில் ஏலம் நடைபெறுவது கவலை யளிக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், பரிசுப்பொ ருட்கள் கொடுப்பதும் நடந்து கொண்டு இருந்தது. பல முறை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் ஆதாரங்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இப்போது வரை தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. திருமணத்திற்கு கொண்டு சென்ற பணம், நகை வாங்க எடுத்துச் சென்ற பணம், ஜவுளி எடுப்பதற்கு கொண்டு சென்ற பணம், இப்படி நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவைக்காக எடுத்துச் சென்ற பணத்தை மட்டும் காவல்துறையால் பிடிக்கமுடிந்ததே தவிர உண்மை யாகவே வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர் பணம் கொடுத்ததை அறவே பிடிக்கமுடியவில்லை. அதுபோலதான் இப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் பதவிகளை பயன்படுத்தி கொள்ளையடிப்பதற்காக ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு விலை வைக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இத்தகைய சம்பவங்களை இந்திய தேர்தல் ஆணையமும் தமிழக தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை தான் பார்க்கிறது.
இந்த ஆணையத்தால் பதவிகள் ஏலம் விடப்படு வதை தடுக்க முடியவில்லையே என்று பொது மக்களே ஏளனம் செய்து சிரிக்கின்றனர். வாக்காளர்க ளுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை அடுத்து இப்போது கிராமப்புறங்களில் ஏலம் எடுக்கும் கலாச் சாரம் தமிழகத்தில் புதிதாக பரவி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க இந்த ஏல கலாச்சாரம் பரவினால் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஏன் தேர்தல் ஆணையம் பார்க்க மறுக் கிறது. ஜனநாயகத் தேர்தலை கேலிகூத்தாக்கும் இந்த அபாயகரமான ஏல கலாச்சாரத்தால் ஓட்டுப் போடும் உரிமை கூட இல்லாமல் இருக்கும் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.