முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை, ஏப்.3- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் அதை ஒட்டியப் பொருளாதார பிரச்ச னைகளை எதிர்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏப்ரல் 3 வெள்ளியன்று கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
1) பொதுமக்களுக்கு மிகவும் அத்தியா வசியமான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் புழக்கத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பொருட்களுக்கும் சராசரியாக ஐம்பது சதமான விலை உயர்வு ஏற்பட்டு மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர். ஏற்கனவே வேலையையும் வருமானத்தையும் இழந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வும், பொருட்கள் தட்டுப் பாடும் மக்களை மிக மோசமாக பாதிக்கும். இதனை கட்டுப்படுத்தாவிட்டால் வரும் சில நாட்களில் மேலும் ஆபத்தான விளைவுகள் நேரிடும். எனவே தமிழக அரசு அத்தியா வசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்ப தற்கும், விலை உயர்வினை கட்டுப்படுத்துவ தற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அதிக விலைக்கு விற்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
2) தற்போது நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. பிரதமர் அறிவித்த 5 கிலோ அரிசி மற்றும் பொருட்கள் இதுவரை வழங்கப்பட வில்லை. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என்கிற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றை வைத்து ஊரடங்கு அமுலில் உள்ள ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை மக்கள் வாழ்க்கை நடத்து வது மிகவும் சிரமம். எனவே தமிழக அரசு இரண்டாவது கட்ட நிவாரண உதவிகளை உட னடியாக அறிவிக்க வேண்டும். பிரதமர் அவர்கள் அறிவித்த அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கிட வேண்டும்.
3) வைரஸ் பாதிப்பின் காரணமாக தமி ழகத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகள் தம் செயல்பாட்டை முடக்கி வைத்துள்ளன. மிக அவசர அவசியமான சிகிச்சைகளை கூட மக்கள் பெற வழி இல்லா மல் உள்ளது. நாகர்கோவிலில் கீழே விழுந்து தலையில் அடிபட்ட ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறு கின்றன. எனவே இத்தகைய மோசமான நிலைமையைத் தவிர்க்க தனியார் மருத்துவ மனைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகளை அளிப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
4) கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறியும் சோதனை செய்ய போதுமான ஏற்பாடுகள் இல்லாத நிலையே நீடிக்கிறது. இதனை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், இதர விஷயங்களை செய்வது மட்டும் பலன் அளிக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
5) ரேஷன் பொருட்களையும் நிவாரணத் தொகையையும் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் மக்கள் அலை மோதும் காட்சி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை யூகித்துதான், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஏற்கனவே எங்கள் கட்சியின் சார்பில் தங்களுக்கு அனுப்பிய கடிதத்திலும் பத்திரிக்கைச் செய்தி யிலும் குறிப்பிட்டிருந்தோம். அது சம்பந்தமான உரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாததன் விளைவுதான் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் குவிந்தது. இதை ஒரு படிப்பினையாக எடுத்து, கூட்டத்தை தவிர்ப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
6) உயிர்காக்கும் மருந்துகளும், அத்தி யாவசிய மருந்துகளும் கிடைப்பதில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட்டு விடாதபடி கவனிக்க வேண்டும்.
7) தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி கள் உள்ள வார்டுகள் மற்றும் காய்ச்சல் வார்டு களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலி யர்கள் இதர ஊழியர்களோடு, பிரசவ மருத்து வர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் ஊழியர் களுக்கு சர்ஜிகல் மாஸ்க் மற்றும் கையுறை கள் தினசரி இரண்டு செட் அளிக்கப்பட வேண்டும். தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் இவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அதிகபட்ச மாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
8) சுய உதவிக்குழுக்கள் மூலம் (சமூக விலகல் கவனத்தோடு) சோப் மற்றும் சானி டைசர் ஜெல் செய்து, அரசு தரப்பில் கெள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் இலவச மாக விநியோக்க வேண்டும்.
9) ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற் றும் துணை சுகாதார நிலையங்களின் முறை யான செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண் டும். உள்ளூர் மக்களுக்கு அதுதான் உதவும். இவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் மீது அவசர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக மக்கள் நலனை பாது காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.