tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நவ.26ல் மறியல் போர்

தருமபுரி, ஆக.31- சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நவம்பர் 26 ஆம் தேதியன்று மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தருமபுரியில் மாநில தலைவர் ப.சுந்தராம்பாள் தலைமை யில் நடைபெற்றது.  இப்பேரவையில் கடந்த 36 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையலர் உத வியாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் 9 மாத மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலி யுறுத்தியும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.பள்ளிகளை மூடக்கூடாது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 15ஆம்  தேதியன்று மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த விளக்க கூட்டம் நடத்து வது; அக்டோபர் 16ஆம் தேதியன்று  மாவட்ட  அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்து வது; அக்டோபர் 23ஆம் தேதியன்று ஒன்றிய அளவில் பிரச்சாரம் நடத்துவது; நவம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்க ளில் மாலைநேர கோரிக்கை கவன ஈர்ப்பு பேரணி; நவம்பர் 26ஆம் தேதியன்று மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அரசு கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் 22 முதல் மாநில, மாவட்ட நிர்வா கிகள் பங்கேற்கும் காலவரையற்ற போரா ட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு நிறை வுரையாற்றினார். மாநிலதுணைத் தலைவர் கே.அண்ணாதுரை நன்றி கூறினார்.