திருச்சிராப்பள்ளி, நவ.28- ஸ்ரீரங்கத்தில் காவல் துறையின் மூலம் சி.சி.டி.வி கேமரா பொருத்தப் பட்டு குற்றங்களை கண்காணிப்ப தற்காக காவல் கண்காணிப்பு அறை திறப்பு விழா ஆட்சியர் சிவராசு தலை மையில் புதனன்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். காவல் கண்காணிப்பு அறையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறிய தாவது, திருச்சி மாநகர பகுதிகளில் காவல்துறை சார்பில் 1178 கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக மாநகரம் முழுவதையும் இணைத்து மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக் கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காவேரி பாலம் முதல் மாம்பழச் சாலை வரை, மாம்பழச் சாலை சிக்னல் முதல் அம்மா மண்ட பம் வரை, அம்மா மண்டபம் உள்பகுதி, அம்மா மண்டபம் முதல் ராஜகோபுரம் வரை, ராஜகோபுரம் முதல் தேவி தியேட்டர் சந்திப்பு வரை, ராஜ கோபுரம் முதல் ரங்கா ரங்கா கோபுரம் வரை, ரங்கா ரங்கா கோபுரம் முதல் நான்கு உத்திர வீதிகள் ஆகிய இடங் களில் புதிதாக 90 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு, இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் காவல்நிலை யத்திற்கு எதிரே அமைந்துள்ள காவல் கண்காணிப்பு அறை மூலம் கண் காணிக்கப்படுவதோடு நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுட னும் இணைக்கப்பட்டு கண்காணிக்கப் படவுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் நிஷி, மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் வேதரத்தினம், ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரகம் காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.