tamilnadu

img

வேலைவாய்ப்பு நகரை ஆபத்தில் இருந்து காக்குமா அரசு?

திருப்பூரில் அதிகரிக்கும் தொற்று : பரிசோதனை குறைவு

திருப்பூர், ஜூலை 10 – திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் நோய்த் தொற்றைக் கண்டறியும் கொரோனா பரிசோதனை மிக, மிகக் குறைவான அளவே நடைபெற்றுள் ளது. இதனால் வரக்கூடிய நாட்களில் இம்மாவட்டத்தில் கொரோனா பாதித் தோர் எண்ணிக்கை மிகப்பெருமளவு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

வேகமாக உயரும் எண்ணிக்கை

மார்ச் 24ஆம் தேதி இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் திருப்பூரில் ஒரேயொருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டார். ஊரடங்கினால் திருப்பூரில் பின் னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டது. மாவட்டம் முழுமையும் முடங்கியி ருந்தபோதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொஞ் சம், கொஞ்சமாக அதிகரித்தது. அடுத்த இரு வாரங்களில், அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி மொத்தம் 19 பேர் பாதிக் கப்பட்டனர். அடுத்த ஒரு மாதத்தில், ஜூன் 12ஆம் தேதி இந்த எண்ணிக்கை 114 பேராக உயர்ந்தது. ஒரு மாதத் திற்குப் பின் ஜூலை 8ஆம் தேதி நில வரப்படி கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 262 ஆக இரு மடங்கை தாண்டிவிட்டது. ஜூன் 24ஆம் தேதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந் தது இங்கு கொரோனாவில் முதல் பலி ஆகும். இதுவரை உயிரிழந்தோர் மொத்தம் மூவர்.

இம்மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கி மூன்றரை மாதங்களில், கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந் தது போல் தெரிந்தது. ஆனால் கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா பாதித் தோர் எண்ணிக்கை மிக வேகமாக அதி கரித்துள்ளது. குறிப்பாக ஜூலை 6ஆம் தேதி13 பேர், ஜூலை 7ஆம் தேதி 17 பேர், ஜூலை 8ஆம் தேதி 26 பேர் என எண் ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிக ரித்துள்ளது.

காரணம் என்ன?

பின்னலாடைத் தொழிலைப் பிரதான மாகக் கொண்ட திருப்பூர் மாவட்டத்தில் பர வலாக சிறு தொழில்கள் உள்ளன. மே 6ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப் பட்டு பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. படிப்படியாக பல் வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. இப்போது ஊரடங்கு நீடித்தாலும் கூட, குறிப்பாக திருப்பூரில் சகஜ நிலை போலவே காட்சியளிக்கிறது. ஒரு தொழில் நகரம் என்ற முறையில் தொழில், வர்த்தகப் போக்குவரத்தை நீண்ட நாட்களுக்கு முழுமையாக முடக்கி வைத்தால் பொருளாதாரப் பாதிப்பு, வேலையிழப்பு பெரும் பிரச் சனையாக உருவெடுக்கும் என்று கட்டுப் பாடு தளர்த்தப்பட்டது.

இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்த, திட்டமிட்ட நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொள்ளவில்லை. ஊரடங்கை அமல் படுத்துவது மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த போதுமான தல்ல, இச்சமயத்தில் பரிசோத னையை மிக அதிக அளவில் நடத்த  வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெளிவாக வலியுறுத்தினர். ஆனால் ஊர டங்கு முழுமையாக இருந்தபோதும் சரி, அதன் பிறகு தளர்த்தப்பட்ட நிலையிலும் சரி திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதை மாவட்ட நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நெருக்கடியான நகரம்

திருப்பூர் மாவட்டம் நெருக்கம் மிகுந்த நகரமாகும். சுகாதார வசதியும் போதுமா னதாக இல்லை. பெரும்பாலான மக்கள் நெருக்கடியான குடியிருப்புகளில் வசிக்கும் நிலையில் கொரோனா சமூகப் பரவலாக மாறினால் விபரீதமான நிலை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. இந்த சூழ லில், அதிக அளவிலான பரிசோதனை நோய் பரவலைக் கட்டுப்படுத்தும், குறைந்த அளவிலான பரிசோதனை நோய் பரவலை வெகுவாக அதிகரிக் கும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திருப்பூரைப் பொறுத்தவரை கோவை, ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை ஒப்பிட்டால் கூட பரிசோதனை எண்ணிக்கை மிகக்குறை வாகவே உள்ளது. ஜூலை 9ஆம் தேதி வரை இங்கு மொத்தம் 21 ஆயி ரத்து 275 பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன என திருப்பூர் மாவட்ட சுகா தாரத் துறை துணை இயக்குநர் மருத்து வர் ஜெகதீஸ்குமார் தெரிவித்தார்.

சரிபாதிக்கும் குறைவு

மாநிலஅளவில் ஜூலை 8ஆம் தேதி வரை 14 லட்சத்து 49 ஆயிரத்து 414 பரிசோதனைகள் செய்யப்பட்டுள் ளன. அதாவது ஒரு லட்சம் பேரில், 1,765 பரிசோதனைகள் செய்யப்பட் டுள்ளன. சராசரியாக 1.77 சதவிகித மாக இருக்கும் நிலையில் இது போது மானதல்ல என்று மருத்துவத் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட் டத்தில் ஒரு லட்சம் பேரில் 851 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட் டுள்ளன. இது வெறும் 0.85 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதாவது மாநில சரா சரியை விட சரி பாதிக்கும் குறைவாகவே திருப்பூர் மாவட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஊரடங்கும் வெகுவாகத் தளர்த்தப்பட்டு, பரிசோத னையும் மிக மிகக் குறைவாக இருப்ப தால் கொரோனா தொற்றுப் பரவல் மிக மோசமான அளவில் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் திருப் பூர் மாவட்ட நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ பரிசோதனையை அதி கரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தா மல் அலட்சியமாகச் செயல்படுகின்றனர்.

நிர்வாகத்தின் அலட்சியம்

இத்துடன் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்ததாக, மருத்துவம னையில் இருந்து அனுப்பும் போதும், பரிசோதனை எதுவும் மேற்கொள்வ தில்லை. தொற்று முழுமையாக நீங்கிய தாக உறுதிப்படுத்தாமல் அனுப்பி விடு கின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை புறக்கணித்து, ஓரிரு நாட்களில் அவர்கள் வேலைக்குச் செல்ல லாம் என்றும் கூறி அனுப்புகின்றனர். கொரோனாவில் குணமடைந்தோருக்கே மீண்டும் பாதிப்பு வந்த சம்பவங்கள் இருக்கும் நிலையில், உரிய வழிமுறை யைப் பின்பற்றாமல், சுகாதாரத் துறையி னர் அலட்சியப்படுத்துகின்றனர். இத னால் மிக அதிகமானோருக்கு கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது. ஆக, ஆரம்ப கட்டத்தில் பரிசோதனை செய்து தடுப்பதிலும், நோய் சிகிச்சை பெற்றுத் திரும்புவோருக்கு பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவதிலும் என இரு விதத்திலும் சுகாதாரத் துறையினரின் செயல்பாடு மிகவும் அலட்சியமாக உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ இதில் கவனம் செலுத்துவதாக இல்லை. இது திருப்பூரை மிக மோசமான நிலைக்குத் தள்ளக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே தமிழகத்தின் வேலைவாய்ப்பு நகரமான திருப்பூரில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பதுடன், உரிய தலையீட் டைச் செய்ய வேண்டும். அப்போதுதான் பெரும் பாதிப்பு ஏற்படாமல் திருப்பூரைக் காக்க முடியும்.

-வே.தூயவன்