இந்தியாவில் ஒரு கட்சியை பின்னால் இருந்து இயக்கும் அமைப்பு கிடையாது. ஆனால், பாஜகவை பின்னால் இருந்து இயக்கும் கொடிய ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. உலகில் எங்கிருந்து யூதர்கள் வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டில் அனியாஸ் சட்டம் உள்ளது. அதைப்போன்றே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கெதிராக நாடே பற்றி எரிகிறது. இந்தியாவில் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் உள்ளனர். பெருந்திரளான மக்களை அச்சத்தில் வைத்துவிட்டு மற்றவர்கள் நிம்மதியாக வாழ முடியாது.