காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து காசா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 82 பேர் உயிரிழந்தனர். 152 பேர் காயமடைந்தனர். 2023 அக்டோபர் 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,010 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 998 பேர் காயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், தொடர்ந்து காசா மீது தாக்குதலை நடத்தி பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வருகிறது. இஸ்ரேல் தனது வரலாற்றில் எப்போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடித்ததே இல்லை. அந்த வரலாற்றை தற்போதும் தொடர்கிற வகையில் காசா மீது தொடர்ந்து கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.