tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை: விசிக

சென்னை, ஏப்.6- கொரோனா தொற்றைத் தடுப்பதில் சுகாதாரத்துறை ஊழியர்களைப் போலவே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வரும் தூய்மைப் பணியாளர்க ளுக்கு மூன்று மாத ஊதி யத்தை ஊக்கத் தொகை யாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடு தலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது. இதுகுறித்து அக்கட்சி யின் தலைவர் தொல். திரு மாவளவன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 15  மாநகராட்சிகள், 121 நகராட்சி கள், 528 பேரூராட்சிகள், மற்றும் 12525 கிராம ஊராட்சி களில் மொத்தம் 64583 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக் கணக்கான பணியாளர்கள் தூய்மைப் பணியைச் செய்து வருகிறார்கள். நேரடியாக உள்ளாட்சித் துறையில் பணியாற்றுகிற வர்களைத் தவிர ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறு வனங்கள் மூலம் அமர்த்தப் பட்டுள்ள தூய்மைப் பணி யாளர்களும் உள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் இந்தத் தொழிலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து  வருகின்றனர். அவர்க ளுக்குப் போதுமான அள வில் முகக் கவசங்கள், கையு றைகள் உள்ளிட்ட பாது காப்புக் கருவிகள் வழங்க வேண்டும்.  அதுமட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் மூன்று மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக தமி ழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்  கையில் தெரிவித்திருக்கிறார்.