ஈரோடு, ஜூலை 29- ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை யில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி ஒப்பந்தத் தொழிலா ளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை யில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக் கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களாக துணை செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு முறையாக ஊதி யம் வழங்காததை கண்டித்து பணிப்பு றக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தனியார் ஒப்பந்த நிறுவனம் அனைவருக்கும் ஊதியம் தர உறுதியளித்தது. ஆனால், சில ருக்கு மட்டுமே ஊதியம் வழங்கி யுள்ளதாகவும், மீதம் உள்ளவர்க ளுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமெனக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.