அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை, அக். 2 ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். ஆயுத பூஜை மற்றும் தீபா வளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போக்கு வரத்துத்துறை துணை செய லாளர் பிரபாகரன், போக்கு வரத்து ஆணையர் சமய மூர்த்தி, கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, போக்கு வரத்துக்கழக மேலாண் இயக்கு னர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இந்த ஆண்டும் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாத வரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களி லிருந்து 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை தினசரி இயக் கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என 4,265 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து அந்த 3 நாட்களுக்கும் 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1,165 மற்றும் 920 பேருந்துகள் இயக் கப்படும். அந்த நாட்களில் பெங்களூருவிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்க ளுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கோயம் பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங் களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை திரும்ப 4627 பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென் னைக்கு 27-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி முடிந்து பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப டும். மேலும் தீபாவளிக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் முறையே 570 மற்றும் 925 பேருந்துகளும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கு 221 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்
மேலும், ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை யில் சென்னையில் இருந்து தங்க ளது சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சென்றுவர ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை சென்னையி லிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 1,695 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து மொத்த மாக 6,145 பேருந்துகள் இயக் கப்படும். மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்து களும், கோயம்புத்தூரில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூரு வில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப் படுகின்றன. மேலும், ஆயுதபூஜை முடிந்த பின்பு 8ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை, பிற ஊர்களிலி ருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், கோயம்புத்தூ ருக்கு 490 பேருந்துகளும், பெங் களூருவுக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு சிறப்பு மையங்கள்
முன்பதிவு சிறப்பு மையங் கள் 23ஆம்தேதியில் இருந்து 26ஆம் தேதிவரை செயல்படும். கோயம்பேடு, தாம்பரம் சான டோரியம் (மெப்ஸ்), பூந்த மல்லி பேருந்து நிலையம், மாத வரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மொத்த முள்ள 30 முன்பதிவு மையங்க ளில் 3-ந்தேதி முதல் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது.