tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை, மார்ச் 5- கொரோனா வைரஸ் பரவ லைத் தடுக்க தேவையான நடவ டிக்கைகள் எடுக்கவும், அது  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும் அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் தமிழக தலை மைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். தமிழக தலைமைச் செய லாளர் எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்  டத்தை உடனடியாக நடத்த வேண்டும், மாவட்டத் தலைமை  மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரிய தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தனிப்  பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களும், மருத்துவ மனைகளில் இருந்து வெளியே செல்பவர்களும் கைகளை நன்றாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்  பிட்டுள்ளார். தடுப்பு நட வடிக்கை, விழிப்புணர்வு ஏற்ப டுத்த உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்லூரிகள், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல், வருவாய், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், பாதுகாப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் அறி வுறுத்தியுள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசுத்  துறை தனியார் துறை அலுவ லகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், திருமண மண்ட பங்கள் ஆகியவற் றில் துப்புரவு  குறித்து விழிப்புணர்வ ஏற்படுத்து வதுடன், கைகழுவத் தேவை யான சானிடைசர்களை வைக்கச்  செய்ய வேண்டும் என அறி வுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலை யத்திற்கு வரக்கூடிய பயணி களை பரிசோதனை செய்வ தற்காக 27 மருத்துவர்கள், 30  செவிலியர்கள், 15 பாராமெடிக் கல் பணியாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர் என சுகா தாரத்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கண்காணிக்கிறோம்: அமைச்சர்

சேலம் அரசு மோகன் குமா ரமங்கலம் மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக்கை யில், “கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், வைரஸ் பாதிப்பு இருக்  கும் நாடுகளில் இருந்து தமிழ கம் வருபவர்களை நேரடி  கண்காணிப்பில் வைத்திருக்கி றோம்” என்றார்.