tamilnadu

img

முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, ஏப்.22- சென்னை தலைமை செயலகத்தில் பத்திரி கையாளர் அறை, கூட்டரங்குகள் போன்றவற்றில் கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற தக வல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் பணிக்கு வரும் ஒவ் வொரு வருக்கும்  ‘ரேபிட் டெஸ்ட்’ உபகரணம் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  முதலமைச்சர் அலுவல கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு ஓட்டுன ருக்கள், காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் உள்பட 327 பேருக்கு இந்த பரிசோதனை மேற்  கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர் 70 பேருக்கும்  பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதலமைச்  சர் உள்பட ஒருவருக்கு கூட கொரோனா தொற்று  இல்லை என்ற முடிவு வெளியானது.