tamilnadu

img

தூய்மைப் பணியாளர்கள் கவுரவித்த காவல்துறை

விருதுநகர், ஏப்.13- மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை களில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைத் தூய்மைப்படுத்தி எவ்வித தொற்று நோய்களும் பர வாமல் தடுத்துவரும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறையினர்  சாத்தூரில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில்  நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்க ளுக்கும் மதியஉணவு விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை சரக காவல் துணைத் தலைவர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சாத்தூர் காவல் ஆய்வா ளர் ஆகியோர் மேற்கொண்டனர்.