tamilnadu

img

கொரோனா வார்டில் 6 பேர் அனுமதி

திருநெல்வேலி: கொரோனா தொற்று காரணமாக நெல்லை அரசு   மருத்துவமனையில்  உள்ள கொரோனா வார்டில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வா ர்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு செயல்பட்டுவருகிறது. மேலும் கொரோனா பரிசோதனை மையமும் இயங்குகிறது. இந்த பரிசோதனை மையத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது.

நெல்லை அரசு  மருத்துவமனை  கொரோனா வார்டில் ராதாபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் மருத்துவர்கள்   தெரிவித்தனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 13 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களது ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதன்கிழமை மணிமுத்தாறு, ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் பாளை சேவியர் காலனியைசேர்ந்த 2 சகோதரிகள் மற்றும் ஒரு நபர் என மேலும் 3 பேரும் கொரோனா வார்டில் சேர்க்கப் பட்டனர்.அவர்கள் 6 பேரும் கொரோனா வார்டில் தனியாக அமைக்கப்பட்டுள்ள சந்தேக வார்டில் உள்ளனர். அவர்களது ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.