tamilnadu

img

இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்களுக்கு -உதவித் தொகை மற்றும் ரேசன் பொருட்கள்

மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து அவர்கள் சிரமப்படும் தகவலை அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அவர்களுக்கு உடனடியாக தமிழக அரசின் உதவித் தொகை மற்றும் ரேசன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார். மேலும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் மனுவேல் ஜெயராஜின் உதவியோடு ரூ.1.5 லட்சம் பெறுமான காய்கறிகளை சு.வெங்கடேசன் எம்.பி.  நேரடியாக சென்று அம்மக்களை சந்தித்து வீடு வீடாக வழங்கினார்