சீர்காழி, மே 29- விவசாயத்திற்கு வழங் கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விதமாக மின்சார திருத்த சட்டம் கொண்டு வந்து விவ சாயிகள் வாழ்வை சீர ழிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சீர்காழி வட்டச் செயலாளர் கே.நாகையா தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டச் செயலாளரும் மாவட்டச் செயற்குழு உறுப்பி னருமான சி.வி.ஆர்.ஜீவா னந்தம் கண்டன உரையாற்றி னார். வி.ச. வட்ட துணைத் தலைவர் கே.அசோகன், மூத்த தோழர் கே.ஆர்.பெரு மாள், சி.ஐ.டி.யு. நகர செயலா ளர் டி..கண்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.