tamilnadu

img

முடக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் பொருட்கள் நேரடி வினியோகம் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி

மதுரை, மே 6- கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப் படும் ரேசன் பொருட்கள் நேரடியாக வீடு களுக்கு சென்று வழங்கப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களி டம் கூறினார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் உள்ள கொரோனா கட்டுப் பாட்டு மையத்தில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதய குமார் புதனன்று ஆய்வுகள் மேற் கொண்டார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொண்டு தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். பிற இயல்பான நாட்கள் போன்று சமூக பொதுவெளியில் இயங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

டாஸ்மாக் மது கடைகள் திறக்கின்ற முடிவு என்பது பிற மாநி லங்களின் எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அப்பகுதிகளுக்கு படை எடுத்துச் செல்கின்ற நிலையைத் தவிர்க்கும் பொருட்டு தான் எடுக்கப் பட்டுள்ளது. அதுவும்  கூட பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டது. மேலும் இது குறித்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைசியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் அனைத்து சூழலைப் பொறுத்து தளர்வு ஏற்படுத்தப்படும்.  

மதுரை மாநகரத்தில் அது போன்ற ஒரு சில பகுதிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல புதிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அது அது அந்தந்த மாவட்டங்களின் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப் படும். அதேபோன்று பொது முடக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்க ளுக்கு ரேசன் பொருட்கள் அனைத்தும் அவரவர் வீடுகளுக்கு நேரடியாக வினி யோகம் செய்ய மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பு முன்னரே செய்யப்பட்டதன் அடிப்படையில் அப்பகுதியில் பொருட்கள் கிடைப்ப தில் எந்த வித தடையும் இல்லை என்றார். பேட்டியின்போது மதுரை மாவட்ட ஆட்சியர்  டி. ஜி. வினய், மாநகராட்சி ஆணையர் சா. விசாகன், உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.