ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி அரசியல் சாசனத்தை மீறினார் பிரதமர்
அயோத்தி, ஆக. 5 - 1992 டிசம்பர் 6 அன்று, கரசேவ கர்கள் என்று அழைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமை யிலான மதவெறி பிடித்த கும்பல் களால் இடித்து நொறுக்கப்பட்ட வரலாற்று சின்னமான பாபர் மசூதி இருந்த இடத்தில், ஓர் அறக்கட்ட ளை மூலம் ராமர்கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை பயன்படுத்தி, உத்தரப்பிரதேச அரசாங்கம் ஓர் அரசு விழா போன்று, ஆகஸ்ட் 5 புதனன்று ராமர் கோவில் கட்டுவதற் கான பூமி பூஜையை நடத்தியது. இந்த விழாவிலிருந்து, மதச்சார் பற்ற இந்திய தேசத்தின் தலைவர் என்ற முறையில் விலகி நின்றிருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியல் சாசனம் வரை யறுத்துள்ள அனைத்து விழுமியங் களையும் புறக்கணித்துவிட்டு, இவ்விழாவில் பங்கேற்றார். சர்ச்சைக்குரிய இடமாக மாற்றப் பட்டு பின்னர் நீதிமன்றத் தீர்ப்பி னால் கையகப்படுத்தப்பட்டுவிட்ட அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டு வதற்கான அடிக்கலை அவரே நாட்டினார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அரசால் அயோத்தி விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர் வருகையால் அந்நகரமும் அருகில் உள்ள பிரதேசங்களும் கடும் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. “சமூக இடைவெளியைப் பின்பற்றி” 175 சாமியார்களும், பூசாரி களுமாக கலந்து கொண்ட இந்த பூமிபூஜை நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்த ரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட காரணமாக இருந்த அந்த கொடிய நிகழ்வுக்கு தலைமையேற்ற ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தின் மூத்த தலைவரான எல்.கே.அத் வானி, அவரது விருப்பத்திற்குரிய இந்த நிகழ்வில், கோவிட் 19 தொற்று பரவல் தடுப்பு என்ற பெயரில் வயது மூப்பு காரணம் காட்டப்பட்டு, பங்கேற்க வாய்ப்பில்லாமல் செய்யப் பட்டது அவருக்கு நேர்ந்தது துர திருஷ்டமே என்று சமூக ஊடகங் களில் பலரும் பதிவு செய்தனர். இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவில்லை. எனினும் தமது அலுவலகத்தில் இருந்தவாறு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அயோத்தி நிகழ்வில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். ராமர் கோவில் கட்டுமானத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய சில அமைப்புகளின் தலைவர்கள், இதில் பங்கேற்க அழைக்கப்பட்டி ருந்தனர்.
இவ்விழாவில் அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அனைத்தும் ராமருக்கு உரியது; ராமர் அனைவருக்கும் உரியவர்” என்று கூறினார். பெரும்பான்மை மதத்தவரின் உணர்வு என்ற பெயரில் ஆளும் அரசாலும் அவர்களது ஆதரவு ஊடகங்களாலும் முன்னிறுத்தப் பட்ட ராமர் கோவில் பூமி பூஜை விழா விற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முத லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு மாநில முதல்வர் களும், பல கட்சிகளின் தலைவர் களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
பிரதமரின் பங்கேற்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது : சிபிஎம்
முன்னதாக இந்த நிகழ்வில் பிரதமர் நேரடியாக பங்கேற்பதும், மாநில மற்றும் மத்திய அரசு நிர் வாகங்களே முன்னின்று நடத்து வதும் போன்ற நடவடிக்கைகள் அர சியலமைப்பு சட்டத்திற்கு எதி ரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் விமர்சித் திருந்தது. இதுதொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப் பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூல மாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் முதல் கூறி வந்தது. உச்சநீதிமன்றம், கோவில் கட்டு வதற்காக வழியேற்படுத்தி, தன்னு டைய தீர்ப்பை அளித்திருந்தது. எனினும், இந்தக் கட்டுமானப் பணி ஓர் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது.
எனினும் அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான ‘பூமி பூஜை’ வைபவத்தை உத்தரப் பிரதேச நிர்வாகம், மத்திய அரசாங்க த்துடன் சேர்ந்து மேற்கொள்கிறது. நாட்டின் பிரதமரே இதில் பங்கேற்கிறார். இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கும், அர சமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானதாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு கிரிமினல் நடவடிக்கை என்றும் கண்டித்திருக் கிறது. அதில் ஈடுபட்ட கயவர் களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மத்திய மாநில அரசுகள் அப்போது பாபர் மசூதியை இடித்துத் தள்ளி யதை இப்போது நியாயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுதும் காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள கட்டுப்பாடுகள் எவ்வித மான மதம்சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கிறது. அயோத்தியில் இறக்கிவிடப்பட்டுள்ள கோவில் பூசாரிகளுக்கும் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாம், அரச மைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை மற்றும் நீதியை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நட வடிக்கைகளைக் கறாராகப் பின்பற்ற வேண்டும், மக்களின் மத உணர்வுகளை எவரும் தங்களின் குறுகிய அரசியல் குறிக்கோள் களுக்காகப் பயன்படுத்த அனுமதி க்கக் கூடாது என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.