ராமர் கோவில் திறப்பு நாளில், மலையாள திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை பகிர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாத நிலையிலேயே, இன்று திறக்கப்பட்டது. அரசியல் நோக்கத்திற்காக திறக்கப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவை சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இந்த நிலையில், மலையாள திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை பகிர்ந்துள்ளனர்.
ராமர் கோவில் திறப்பு நாளில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், திவ்ய பிரபா, கனி குஸ்ருதி, இயக்குனர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, கமல் கேஎம், பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை பகிர்ந்துள்ளனர்.