சண்டிகர்:
ஹரியானா பள்ளிகளில், ‘தோப்புக் கரணம்’ போடுவதைக் கட்டாயமாக்கும் முயற்சியில், அம்மாநில பாஜக அரசு இறங்கியுள்ளது.தோப்புக் கரணம் என்பது அற்புதமான யோகா என்றும், இதன்மூலம் மாண
வர்களின் அறிவாற்றல் வளரும் என்றும் ஹரியானா அரசு கூறியுள்ளது.இதுதொடர்பாக, ஹரியானா மாநில பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ராஜீவ் பர்ஷத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “தோப்புக்கரணம் போடுவது குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்கும். இந்த தோப்புக்கரண யோகாபிவானியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் தினமும் காலையில் நடைபெறும் பிரார்த்தனைகூட்டத்தின் போது 14 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதை கண்காணித்துகுழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்” என்று ராஜீவ் பர்ஷத் தெரிவித் துள்ளார்.பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணிஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலத்தில், பள்ளிக்குழந்தைகள் தினமும் தோப்புக்கரண யோகா செய்வதை, ஏற்கெனவே அங்குள்ள கல்வித்துறையே கட்டாயமாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.