2002 பிப்ரவரி 28ல் புகைப்பட கலைஞர் செபஸ்டின் டிசோசாவின் கேமராவில் பதிவான அந்த புகைப்படங்களை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒன்று வன்முறையாளர்களின் ஆக்ரோசத்தை வெளிப்படுத்திய கையில் இரும்புத்தடி தாங்கிய அசோக் பார்மரின் முகம். மற்றொன்று உயிர்ப்பிச்சை கேட்கும் குத்புதீன் அன்சாரியின் முகம். குஜராத்தில் சங்பரிவார் அமைப்பினர் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டத்தின் அடையாளமாகவே இந்த புகைப்படங்கள் மாறின. அசோக்
பார்மர் பின்னர் கூறுகையில், “மோடி ராஜதர்மத்தை மீறினார். கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில் பெட்டியை சென்று பார்த்தார். ஆனால் நரோடா பாட்டியாவில் காயம்பட்டவர்களை அவர் சந்திக்கவில்லை”என்றார்.