tamilnadu

img

காலிறுதியில் சிந்து, சாய்னா

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் பெரோடுவா மாஸ்டர்ஸ் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.   முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டுள்ளதால் தொட க்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய நட்சத்திரங்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் 2-வது சுற்றில் வெளியேறிய நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் சூப்பர் பார்மில் விளையாடி வெற்றி நடையுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  சாய்னா தனது 2-வது சுற்றில் தென் கொரியாவின் அன் சே யங்கை 25-23, 21-12 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சாய்னா காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்)  எதிர்கொள்கிறார். உலக சாம்பியன் பட்டம் ருசித்த கை யோடு பார்ம் பிரச்சனையுடன் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் சிந்து 2-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் அயா ஓஹோரியை 21-10, 21-15 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.   ரூ. 2.85 கோடி பரிசுத்தொகையைக் கொண்டுள்ள இந்த மலேசியா மாஸ்ட ர்ஸ் தொடரில் சிந்து,சாய்னா மட்டுமே உள்ள மற்ற பிரிவுகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் ஏற்கெனவே வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.