பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை, திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சாய்னா 24 சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 11 சூப்பர் சீர்ஸ் போட்டிகள் ஆகும். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
இவரின் வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிப்பில், அமோல் குப்தே இயக்கியுள்ள சாய்னா படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார்.
சாய்னா படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.