ஈரோடு, ஏப்.13-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அடுத்துள்ள தடையும் பாலத்தை சேர்ந்தவர் பழனிசாமி (38). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி பவானி அருகே கோண வாய்க்கால் என்ற இடத்தில் காளிங்கராயன் வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென்று தண்ணீரில் பழனிசாமி அடித்து செல்லப்பட்டார். பல இடங்களில் தேடியும் பழனிசாமி காணவில்லை. இதுகுறித்து சித்தோடு காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள பாசூர் வாய்க்கால் கரையில் பழனிசாமி உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. பழனிசாமியின் சடலத்தை 18 நாட்களுக்கு பிறகு காவல்துறையினர்மீட்டுள்ளனர்.