tamilnadu

கோபியில் வாடகைக்கார் உரிமையாளர் வெட்டிக்கொலை

கோபி, ஜூலை 10- கோபிசெட்டிபாளையம் அருகே வாட கைக்கார் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கோட்டுப்புள் ளாம் பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (31). இவர் வாடகைகுகார் மற்றும் சரக்கு ஆட்டோ வைத்துள்ளார். இவர் வியாழ னன்று வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பா ததால் அவரது குடும்பத்தார் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தனர்.  

இந்நிலை யில் வெள்ளியன்று பள்ளத்தில் ரத்த கறையு டன் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பது கண்டு அருகில் உள்ளவர்கள் நம்பியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூட்டையை பிரித்து பார்க்கையில், அதில் குமார் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற் றிய காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.