tamilnadu

img

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சன்சைடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு

ஈரோடு, ஏப்.16-ஈரோட்டில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் சன்சைடு இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை.ஈரோடு, பெரியார் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர். இக்குடியிருப்புகள் முறையாக பராமரிக்காமல் இருந்து வருவதால் அவ்வப்போது இடிந்து விழுவதும், பின்னர் அவசர கதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுமாக இருந்து வந்தன. இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலையில் பெரியார் நகர் பி.பிளாக்கில் இரண்டாவது மாடியில் உள்ள குடியிருப்பின் சன்சைடு திடீரென்று இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது உடைந்து விழுந்ததில் பாதி சன்சைடு தொங்கிக்கொண்டிருந்ததையடுத்து, உடனடியாக வீட்டு வசதி வாரியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாலை என்பதால் வெளியே யாரும் இல்லாததால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. பகல் நேரமாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என குடியிருப்புவாசிகள் கூறினர். எனவே பழுதடைந்துள்ள குடியிருப்புகளை கண்டறிந்து உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர்.