மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதில் வெறிநாய் கடித்தவர்களுக்கு போடப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தாணே நகராட்சிக்குட்பட்ட கல்வா பகுதியில் ஆட்கோனேஸ்வர் பகுதியில் செயல்பட்டு வரும் சுகாதார மையம் ஒன்றில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் ராஜ்குமார் யாதவ் என்பவர் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர்தான் அந்த வரிசை நெறி நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வரிசை எனத் தெரிந்து ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
பின்னர், கவனக்குறைவாக கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபிஸ் தடுப்பூசி போட்ட செவிலியரை சுகாதாரத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் மூன்று பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.