கோபி, ஜூலை 22 - கொரோனா காலத்திற்குப் பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே பள்ளி கள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாங்கோயில் சிறுவலூர், அயலூர் உட்பட 7 கிராம ஊராட்சிகளில் புதிதாக தார் சாலை அமைத்தல், தடுப்பணைகள் கான்கிரீட் சாலை கள் அமைத்தல் என ரூ. 273.84 லட்சம் மதிப்பீல் நிறை வேற்றப்பட உள்ள வளர்ச்சிப் பணிகளை பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக் கல் நாடி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், வருகின்ற ஆண்டில் மாற்றுத்திறனாளிப் பள்ளி மாணவ, மாணவி களுக்கு பள்ளியில் தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கொரோனா காலத்திற்குப் பிறகு கருத்துக் கேட்பு நடைபெற உள்ளது. அதன்பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். மேலும், 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.