tamilnadu

பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

கோவை, ஜூன் 12-   கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவும் மற்றும் நோட்டு, புத்தகங்களுக்கான கட்டணங்கள் செலுத்தக்கோரியும், புத்தகங்களை பெற பெற்றோர்களை அழைப்பதாகவும் தொடர்ந்து பெற்றோர்களிடமிருந்து புகார் கள் வந்த வண்ணம் உள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி பொது முடக்க காலத்தில் பள்ளிகள் கல்வி கட்ட ணங்கள் செலுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணையின்படி, கோவிட்-19 வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி பொது முடக்கம் அம லில் உள்ள நிலையில் அனைத்து தனியார் பள்ளிகள், பெற்றோர்களிடம் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்ட ணங்கள், 2019-2020ஆம் கல்வியாண்டின் நிலுவை கட்டணங்கள் மற்றும் அந்நிலு வைக்கான தாமத கட்டணங்களை செலுத்த வற்புறுத்தக் கூடாது என ஆணையிடப்பட் டுள்ளது. இந்நிலையில், கல்வி கட்டணங்கள் மற்றும் புத்தக கட்டணங்கள் செலுத்த பெற் றோர்களை கட்டாயப்படுத்துவது, தமிழக அரசின் அரசாணை மற்றும் அறிவுரைகளை மீறும் செயலாக கருதப்படுகிறது.

எனவே, இதுகுறித்த பெறப்படும் புகார்கள் உறுதி செய்யப்படும் நிலையில், பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்ப டும் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி  தெரிவித்துள்ளார்.. மேலும், இத்தகைய நெருக்கடியான காலகட்டங்களில் அரசின் அறிவுரைகள் மற்றும் அரசாணையை பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது பள்ளி நிர்வா கத்தின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து செயல்பட அனைத்து தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.