ஈரோடு, ஜூன் 10- கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்து மீறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரண மாக கடும் பாதிப்பையும், பேரழிவையும் மனித சமூகம் சந்தித்து வரும் நிலையில், 5 ஆவது கட்ட ஊரடங்கு அமலாக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்த கைய ஓர் நெருக்கடியான சூழ்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெற்றோர்களையும், மாணவர்களையும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, கொரோனா காலத்தில் ஊரடங்கு அம லில் உள்ள நிலையில் பலதரப்பினரும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வருமான இழப்பும், அது சார்ந்த நெருக்க டிகளையும், குடும்ப கஷ்டத்தையும் எதிர் கொண்டு வரும் சூழலில் தனியார் பள்ளிக ளின் புதிய புதிய அறிவிப்புகளால் ஒவ் வொரு நாளும் மாணவர்களும், பெற்றோர்க ளும் பதற்றம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் இணையதள வழி கற்றல் கட்டா யமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஆன்ட்ராய்டு செல்போன் சில மாணவர் களுக்கு எட்டா கணியாக உள்ளது. மேலும் மாணவர்கள் குடியிருக்கும் பகுதியில் இணையதள வசதி சரிவர கிடைக்காத நிலை யில் தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி பெற்றோரை வகுப்பிற்கான கருவிகளை பெற்றுத்தர வற்புறுத்துகின்றன. இணை யதள வகுப்புகள் நடத்துவதையும் வேலை நாட்களாகக் கணக்கிடப்படும் என அச்சு றுத்துகிறது. இவ்வாறு மாணவர்களையும், பெற்றோர்களையும் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமற்றதாகும். மேலும் இது கடுமையான குழந்தை உரிமை மீறல் நடவடிக்கையாகும். அதேபோல் கட் டாயப்படுத்தி கல்விக் கட்டணம் வசூலிப் பதும் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தனி யார் பள்ளி நிறுவனங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்ட நிர் வாகம் உறுதியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.