ஈரோடு,நவம்பர்.30- ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக நிறுவனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்துள்ள ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பால் கடைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகிறது.