tamilnadu

img

கோபியில் மழைக்காலத்திற்கான வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்

கோபி, ஜூன் 15- கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள தூக்க நாயக்கன்பாளையம் வனச ரகத்திற்குட்பட்ட வனப்பகு தியில் திங்களன்று மழைக் காலத்திற்கான வன விலங் குகள் கணக்கெடுக்கும் பணி கள் தொடங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் புலிகள் காப்பகத் திற்குட்பட்ட கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கடம்பூர், மல்லியம் மன், துர்க்கம், விளாங்கோம்பை, பங்களாபு தூர், கணக்கம்பாளையம் உட்பட 7 காவல் சுற்றுகளில் மழைக்கால வனவிலங்குள் கணக்கெக்கும் பணி திங்களன்று தொடங்கி யுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணிகள் ஜூன் 15 முதல் 20 ஆம் தேதி வரை மொத் தம் ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், 3 நாட்கள் பகுதிவாரி கணக்கெடுப்பும், 3 நாட்கள் நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப் பும் நடைபெறும். இதில் வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற் றும் வேட்டைத்தடுப்புகாவலர்கள் என 6 பேர் கொண்ட 7 குழுவினர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், யானை கள், புலிகள் மற்றும் பெரிய தாவர உண்ணி கள், மாமிச உண்ணிகளின் கணக்கெடுப்புக ளின் எச்சம், நகக்கீறல்கள், கால்தடங்கள், வனவிலங்குகளை நேரடியாக பார்த்தல் போன்றவை கணக்கிடப்படும். இதற்கென அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட வைகளை பயன்படுத்தி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.  இந்த கணக்கெடுக்கும் பணியில் சேக ரிக்கப்படும் தகவல்கள் அறிக்கையாக மாவட்ட வன அலுவலகத்தில் சமர்பிக்கப்ப டும் என்றும் அதிலிருந்து விலங்குகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.