tamilnadu

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்க ஓய்வூதியர் அமைப்புகளில் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்

ஈரோடு, அக்.4- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சர்வதேச ஓய்வூ தியர் தின கருத்தரங்கில் மத்திய,  மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளில் ஒருங் கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பு களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோட்டில் சர்வதேச ஓய்வூதியர் தின கருத்தரங்கம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்.மணிபாரதி தலைமை வகித்தார். செயலாளர் என்.ராமசாமி வரவேற் றார். துணைத் தலைவர் சி.பரமசிவம் கருத்தரங்கை துவக்கி பேசினார். அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலை வர் எஸ்.மோகன்தாஸ் சிறப்புரையாற் றினார். அரசு போக்குவரத்து ஊழியர் நல அமைப்பின் செயலாளர் எஸ்.ஜெய ராமன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
இக்கருத்தரங்கில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண் டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை அரசுகள் உத்தரவாதம் செய்ய வேண்டும். கம்முடேஷன் தொகை பிடித்தம் காலத்தை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அனைத்து மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு வரு மான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாளன்றே ஊழியர்களை தற்காலிக  பணி நீக்கம் மற்றும் 17பி குற்றச் சாட்டு வழங்கி அரசு ஊழியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அரசு விதிக ளுக்கு புறம்பா ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தும் செய்வதை கைவிட வேண் டும். மத்திய, மாநில அரசுகள் 1.7.2019 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படி, நிலுவை தொகையை உடனே  அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.