ஈரோட்டை சேர்ந்த வேல்முருகன் என்ற நபர், முகநூலில் குறைந்த முதலீட்டில் அதிக வட்டியில் லாபம் தருவதாக கூறிய ஒரு விளம்பரத்தை நம்பி பெரும் தொகையை இழந்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட லிங்கில் கிளிக் செய்து, மோசடியாளர்கள் கூறியபடி முதலில் சிறு தொகைகளை அனுப்பிய வேல்முருகனுக்கு தொடக்கத்தில் சில லாபத் தொகைகள் திரும்ப வந்தன. இதனால் நம்பிக்கை ஏற்பட்ட அவர் தொடர்ந்து மொத்தம் ரூ.66.25 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
ஆனால் பின்னர் எந்தத் தொகையும் திரும்ப வரவில்லை. அவர்களை தொடர்புகொள்வதற்காக முயன்றபோது, மோசடியாளர்கள் தலைமறைவாகி விட்டனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேல்முருகன், ஈரோடு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
