ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பாசூர் கட்டளை பகுதியில் கதவணையை ஒட்டியுள்ள சாலையை புதுப்பிக்கும் பணியின்போது, சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனை சீரமைக்கும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.